2 November 2013

காதல்!!

              

    காதலே! உன் பிறப்பிடம் என்ன ஊற்றா??
    எப்போதும் ஊறிக்கொண்டே இருக்கிறாய்..

    மனித கண்கள் என்ன உன்னால்
    உருவான விஞ்ஞானிகளா??
    எப்போதும் புதுமைகளைக்
    கண்டுகொண்டே இருக்கின்றன...

    பத்தினித்தாய் உன்னைப்
    பத்துத்திங்கள் சுமந்து பெற்றாளா??
    எப்போதும் மாசின்றியே இருக்கிறாய்..

    முடிவிலிதான் உன் எல்லையோ?? எப்போதும்
    முன்நின்று கண்ணில் படாது இருக்கிறாய்..

    பெண்களென்ன உன் இரதமோ?
    ஆண்களென்றால் உனக்குக் கொஞ்சம் இதமோ?

    வாரமென்ன உன் ஆரமா?
    வாழ்க்கை என்ன உன் தாரமா?

    விழிகள் என்ன உன் வழிகளோ?
    மாலை தான் நீ வரும் வேளையோ?

    மதியும் இரவியும் தான் உன் தூதுவர்களோ?
    மயக்கமும் தயக்கமும் தான் உன் பண்புகளோ?

    அன்பு எல்லாம் உன் அணிகளா?
    அரவணைப்பெல்லாம் உன் பணிகளா?

    பிரிவுகள் உனக்கென்ன உரமா?
    பரிவுகள் உனக்களித்த வரமா?

    குருதி என்ன உன் நிறமா?
    கூடுதலே உன்னுடைய அறமா?

    இன்பங்கள் உன் ஏற்றங்களா??
    சிதைவுகள் என்ன நின் சீற்றங்களா?

    நினைவுகளே உன் பதிவுகளா??
    கனவுகளே உன் புனைவுகளா?

    இயற்கை நீ விளையாடும் அரங்கமா?
    செயற்கை உன் உதவிகரங்களா?
    ஈர்ப்புகளே உன் திறங்களா??

    ஆயிரம் வினாக்கள் உன்னிடம் கேட்க
    வேண்டும் என்று நினைத்தாலும் கூட‌
    அடி மனத்தில் எழுந்து, வெளிப்படாத‌
    வினாக்கள் ஓராயிரம்...

            -சு.க.மணிவேல்.